திண்டுக்கல் த.வெ.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திண்டுக்கல்லில் த.வெ.க. வேட்பாளர் நசீர் ராஜா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.. திண்டுக்கல் போட்டாசியர் பழனிவேல் முன்பு தனது மனுவை தாக்கல் செய்தார். அவருடன் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இது குறித்து வேட்பாளர் நசீர் ராஜா பேசியதாவது: சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளான போதும் கூட திண்டுக்கல்லில் தரமான ரோடு இல்லை. குடிநீர் கிடைக்கவில்லை. மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. இளைஞர்களுக்கு படிப்பதற்கு தகுந்த கல்லூரி இல்லை. எந்த அடிப்படை வசதியும் ஆட்சியாளர்கள் செய்யவில்லை. மக்களுக்கு லஞ்சம் வாங்காமல் நாங்கள் சேவை செய்ய எங்கள் தலைவர் விஜய் வழியில் தொண்டாற்ற காத்திருக்கிறோம். இந்த தேர்தலலில் எங்களுக்கு மக்கள் வாய்ப்பளிப்பார்கள். நல்லது செய்ய நாங்கள் காத்திருக்கிறோம். மக்கள் வாய்ப்பளித்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.





