• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம்..,

ByKalamegam Viswanathan

Apr 4, 2026

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று முருகனுக்கு பட்டாபிஷேகமும் கோவிலுக்குள் ஆறு கால் மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து நாளை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றம் பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணியசுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. திருப்பரங்குன்றம் மலையை சுற்றி பச்சைக்குதிரை ஓட்டம் முடிந்த பின், பச்சை குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் கோவிலுக்கு உள்ளே உள்ள ஆறுகால் மண்டபத்தில் சுவாமிக்கு தங்ககிரீடம் சூட்டப்பட்டு, திருக்கரத்தில் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி, சேவற்கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெற்றது.

சுவாமியின் பிரதிநிதியாக ஸ்தானிகப் பட்டர் செங்கோலுடன், சேவல்கொடியேந்தி கோயில் பிரகாரத்தை வலம் வந்தார். சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி பகல் 12.00 மணிக்குமேல் 12:20 மணிக்குள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.