புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி மேற்கு, தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கல்குடி, பூதகுடி, கத்தலூர், வடக்குப்பட்டி, ஆண்டியப்பிள்ளை பட்டி, உள்ளிட்ட 59 க்கும் மேற்பட்ட பகுதிகளில் விராலிமலை சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் இன்று தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.

தமிழகத்தில் இம்மாதம் 23-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அனைத்து கட்சியினருமே வேட்பாளரை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கி உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார்.
இன்று காலை விராலிமலை தெற்கு, மேற்கு ஒன்றிய ஊராட்சிக்கு உட்பட்ட கல்குடி, பூதகுடி, மேப்பூதகுடி, கத்தலூர் உள்ளிட்ட 59 கிராம பகுதிகளில் பிரச்சாரம் மேற்க்கொண்டார் அப்போது அவருடன் பார்வர்டு ப்ளாக் கடசி நிறுவனர் முருகன் ஜி அவர்கள் விஜயபாஸ்கர் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள்
அவர் செல்லும் இடமெல்லாம் அப்பகுதி பொதுமக்கள் ஆரத்தி எடுத்து பூரண கும்ப மரியாதை செய்து பொன்னாடை போற்றி வரவேற்றனர்.
பின்னர் அவர் பேசுகையில் “அதிமுக ஆட்சியில் தான் புதுக்கோட்டைக்கு மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்பட்டது.

தாலிக்கு தங்கம் லேப்டாப் விலையில்லா சைக்கிள் உள்ளிட்ட எண்ணற்ற பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது அதனை விடியா தி மு க தடுத்துவிட்டது இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெருவாரியான வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக புரட்சித் தமிழர் எடப்பாடியார் மீண்டும் அமர வேண்டும் அதற்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதிமுக ஆட்சி அமைந்தும் 10000 பணமும் , மகளிருக்கு மாதம் 2000 உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் நாகராஜன், பழனியாண்டி உள்ளாட்ட ஒன்றிய நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




