சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:- பள்ளியில் ஐஸ்கிரீம் சாப்பிடும் குழந்தைகள் போல நடிகர் விஜய் விளையாட்டுத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

ஊர் உலகத்தில் நாட்டு நடப்பில் என்ன நடக்கிறது என்பது விஜய்க்கு தெரியவில்லை.
விஜய் பேசும் வார்த்தைகளில் நிறைய விளையாட்டுத்தனம் உள்ளது.
அவர் சினிமாவில் சிரிப்பு நடிகராகவோ, ஆக்சன் நடிகராகவோ நடிக்கலாம், ஆனால் அரசியலில் விஜய்யின் நடிப்பு எடுபடாது.
நடிகர் விஜய்யை ஒரு வேடிக்கை பொருளாக வாக்காளர்களும், பொதுமக்களும் அரசியல் ஆர்வலர்களும் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
விஜய் பேசி வருவது அவரை ஒரு நல்ல எதிர்கால அரசியல் தலைவராக உருவாக்கக் கூடிய பேச்சாக அவரது பேச்சு இல்லை.
உலகத்துக்கே தெரியும் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்பது தேர்தல் களத்தில் வைக்கக் கூடியது அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு சிங்கங்கள் தான்.

ஒன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, மற்றொன்று ஸ்டாலின் தலைமையிலான திமுக.
இதில் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பதுதான் பேசும் பொருள்.
இதில் அதிமுக வெல்லும் என்பது 100 சதவீத மக்களின் கருத்து.
இதனிடையே நான் தான் நான் தான் நான் தான் என நடிகர் விஜய் கூறி வரும் விஜய்யை ஒரு சிரிப்பு நடிகராக தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.
அரசியலில் நடிகர் விஜய்யை ஒரு ஜோக்கராக பார்க்கிறார்கள்.
தமிழக வெற்றி கழகம் வேட்பாளர்களின் 234 பேர்களில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் பின்னடைவை சந்திப்பார்கள்.
விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது அவருக்கே தன்னம்பிக்கை இல்லாததையே காட்டுகிறது.
நடிகர் விஜய் தனது பெயரையே சொல்லிக் கொண்டு வருவதை ஜாலியாக பார்த்து ஜாலி மூடில் இருக்கும் அவரை காமெடியாக பார்த்து நாம் விட்டு விட வேண்டும்.
களத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து பலமாக உள்ளது. மிகப்பெரிய சக்தியாக அரசியல் வானில் துருவ நட்சத்திரமாக எடப்பாடி பழனிச்சாமி ஜொலிக்கிறார்.
நிச்சயமாக வெற்றிக்கனியை தட்டி பறித்து எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார். என்றார்.




