• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த எஸ்யுசிஐ அமைப்பினர்..,

BySubeshchandrabose

Mar 30, 2026

தமிழக முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

இதில் தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற(தனி) தொகுதியில் சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா ( கம்யூனிஸ்ட்) என்ற அமைப்பில் இருந்து ரஞ்சித் குமார் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்த பொழுது அவருடைய இரண்டு வயது மகனையும் உடன் அழைத்து வந்தார்.

பொதுவாக கோரிக்கையைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தின் போது கோஷம் எழுப்புவது போன்ற வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த எஸ்யுசிஐ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.

அதிலும் போலி இடதுசாரி கட்சிகளை அம்பலப்படுத்துவோம் என முழக்கங்கள் எழுப்பி வந்தனர்.

இதனை அடுத்து பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி தேர்தல் அலுவலரான ரஜத் பீடனிடம் வேட்பு மனு தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றார்.

இன்று பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதியில் இதுவரையில் நாம் தமிழர் கட்சி மற்றும் எஸ்யுசிஐ ஆகிய இரண்டு கட்சியினர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.