• Sun. Mar 29th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பையா போட்டி..,

சோழவந்தான் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பையா போட்டி
த.வெ.க வேட்பாளராகவிஜய் அறிவித்தார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ந்தேதி சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ளது அதற்காக தி.மு.க., அ.தி.மு.க. காங்கிரஸ், நாம்தமிழர், பாரதியஜனதா, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் பட்டியலை கட்சிநிறுவனத்தலைவர் விஜய் வெளியிட்டார். இதில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அ.தி.மு.க.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா அறிவிக்கப்பட்டுள் ளார். இவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் அலங்காநல்லூர் வாவிடமருதூரை சேர்ந்தவர் 03.09.1965ல் விவசாயகுடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் வீரன் சின்னபொண்ணு இவருக்கு அய்யம்மாள் என்ற மனைவியும் கிருஷ்ணவேனி, மகேஸ்வரி, தனலெட்சுமி ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.

மதுரை காமராஜர்பல்கலை கழகத்தில் எம்.ஏ.,(அரசியல்)பட்டம் பெற்றவர். 1980 முதல் 2026 வரை அ.தி.மு.க.வில் கிளைகழக செயலாளராகவும், அலங்காநல்லூர் ஒன்றிய பொருளாளராகவும், மீனவரணி ஒன்றியசெயலாளராகவும், 2011ல் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராகவும், 2020 முதல் விவசாயஅணி மாநில இணைசெயலாளராகவும் பதவி வகித்தார். தற்போது 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அதிலிருந்து விலகி த.வெ.கவில் இணைந்ததால் த.வெ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.