• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டையில் வேட்பாளர்கள் அறிவிப்பு..,

Byமுகமதி

Mar 28, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி சார்பில் மூன்று தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கிய நிலையில் விராலிமலை தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ கு.வைரமுத்து அவர்களும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முதல் பட்டியலில் விஜய பாஸ்கரும் இரண்டாவது பட்டியலில் வைரமுத்துவும் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆலங்குடி தொகுதியில் இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் திருமயம் தொகுதிக்கு வைரமுத்துக்கு எதிராக திமுக சார்பில் அமைச்சர் ரகுபதி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

அதேபோல் விராலிமலை தொகுதிக்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே. செல்லபாண்டியன் அறிவிக்கப் பட்டிருக்கிறார். மேலும் ஆலங்குடி தொகுதிக்கு அமைச்சர் மெய்யநாதனும் புதுக்கோட்டை தொகுதிக்கு எம்எல்ஏ முத்துராஜாவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். மற்ற இரண்டு தொகுதிகளும் அதாவது கந்தர்வகோட்டை அறந்தாங்கி ஆகிய தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கப்படலாம் என்ற நிலையில் இருக்கிறது.