• Fri. Mar 27th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம் அ.தி.மு.க.வேட்பாளராக அறிவிப்பு..,

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ந்தேதி சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அ.தி.மு.க. சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இராமநாதபுரம் மாவட்டம் அரசியல் கட்சிக்கொடிகளின் சுவடுகள் இல்லாத குக்கிராமம் ஆலங்குளத்தில் 09.08.1965ஆம்ஆண்டு எளிய விவசாயகுடும்பத்தில் கிழவன் ஆறுமுகம் தம்பதியினரின் மகனாக பிறந்தார். டி.எம்.இ இயந்திரபொறியியல்பட்டயக்கல்விபயின்றுள்ளார்.

இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், ஆதிராப்ரித்தி என்ற மகளும்,கிஷேர்வெங்கட் என்ற மகனும் உள்ளனர். மனைவி ஆயள்காப்பீட்டுகழகத்தில்பணி;செய்துவருகிறார். மகள் எம்.பி.பி.எஸ்.எம்.டி.,,முடித்துமருத்துவராக உள்ளார். மகன் பி.காம் படித்துள்ளார். மதுரை கே.புதுhர் சர்வேயர் காலணியிலிருந்து அ.இ.அ.தி.மு.க.வில் அரசியல் வாழ்க்கையை 1990ஆண்டு முதல் உறுப்பினராக சேர்ந்து தொடங்கினார். அதன்பின் கழகம் அறிவித்த அனைத்துபோராட்டம்,ஆர்பாட்டம், தர்ணா, மறியல், பொதுக்கூட்டங்கள் என்று அனைத்திலும் கலந்துகொண்டு தீவிர அரசியல்வாதியானார். ஆண்டுதோறும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். பிறந்தநாள்விழாக்களில் இரத்ததானமுகாம் நடத்துவது, ஏழை,எளியோர், மாணவர்கள், விதவைகள், மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள், உணவுகள், மருத்துவமுகாம்கள் மூலம் மருந்து,மாத்திரை வழங்குவது என்று தனது மக்களின் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

மேலும் தி.மு.க.ஆட்சிகாலத்தில் அராஜகஅரசியல் நடத்திவந்த போது அதை எதிர்த்து மனதைரியத்துடன் முல்லைபெரியாறுஅணைபிரச்சனையில் சாதனை படைத்த ஜெயலலிதாவிற்கு நடந்த பாராட்டுவிழாபொதுக்கூட்டத்திற்கு மதுரை ரிங்ரோட்டில் இடம் தந்;து உதவியஊக்கத்திற்காக 2011ல் ஜெயலலிதா அவருக்கு மதுரை புறநகர் மாவட்டமாணவரணி செயலாளராக பொறுப்பு வழங்கினார். அதன்பின் 2016ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் கோட்டையான சோழவந்தான் தொகுதியில் முதன்முதலாக போட்டியிட்டு 87,044 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதன் பின் கழகத்தினரே வியந்துபார்க்கும் அளவிலான பணிகளை தொடர்ந்துசெய்து வருவதை பாராட்டி மதுரைபுறநகர்மாவட்டதுணைச்செயலாளராக பொறுப்பேற்றார்.

மேலும் சமூகபணிக்காக குளோபல்பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவடாக்டர் பட்டம் வழங்கியது. தற்போது அ.தி.மு.க.வின் 11பேர்கொண்ட வழிகாட்டுகுழுவில் உறுப்பினராகவும், தேர்தல்பிரச்சாரக்குழுவில் உறுப்பினராகவும் பணிசெய்து வருகிறார். மேலும் சோழவந்தான் தொகுதியில் இதுவரை யாரும் செய்யாத ஏராளமானநலத்திட்டங்களும், கொரோனா ஊரங்கில் 2மாதம் தொடர்ந்து ஏழை, எளியோருக்கு உணவளித்தும் தொகுதி மக்களுக்கு அரிசி, பலசரக்கு, காய்கறி தொகுப்புகள்வழங்கினார்.

அதன்பின் 2021 சட்டமன்றதேர்தலில் மீண்டும் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றிவாய்பை இழந்தார். ஆனால் அதன் பின்னும் விடாமுயற்சியோடு கழக பொதுச்செயலாளர் எடப்பாடி யார், மாவட்ட கழச்செயலாளர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகளின் அன்பும் ஆதரவும் பெற்று தொடந்து பல்வேறு கழக சமூக பணிகள் செய்து வந்ததால் தற்போது மூன்றாவது முறையாக 2026 சட்டமன்றதேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சிதொண்டர்களும், பொதுமக்களும் வெற்றிபெற வாழ்த்துதெரிவித்துவருகின்றனர்.