• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ ராமநவமி பிரம்ம உற்சவத்தை முன்னிட்டு தேர்த் திருவிழா..,

ByS. SRIDHAR

Mar 27, 2026

புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஒன்றியம், கடையக்குடி பிரசன்ன ரெகுநாதபுரத்தில் உள்ள அருள்மிகு பிரசன்னா ரகுநாத பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராம நவமி பிரம்ம உற்சவத்தை முன்னிட்டு பங்குனி மாதம் ஐந்தாம் நாள் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன ரெகுநாத பெருமாள், ஸ்ரீ ராமர், ஸ்ரீ லெட்சுமணர், சீதாதேவி, ஸ்ரீ கருடாழ்வார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின் பத்தாம் நாள் திருவிழாவான இன்று தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதன்பின் மலர்களாலும் பழங்காளாலும் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மங்கள வாத்தியம் இசைக்க வானவேடிக்கையுடன் ஸ்ரீ பிரசன்ன ரெகுநாத பெருமாள் கோவிலை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அருள் பாலித்தார். திருத்தேரை ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.