• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

விசாரணைக்கு வந்த வாலிபர் தப்பி ஓடியதால் பரபரப்பு..,

ByP.Thangapandi

Mar 26, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை தெற்கு தெருவைச் சேர்ந்த விஜய்ஆனந்த்( என்ற) சோட்டை காதன் என்ற வாலிபர் (29).

நேற்று அதே பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி என்பவருடன் தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிச்சைமணி எழுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.,

இந்த புகாரின் அடிப்படையில் எழுமலை போலீசார் விஜய்ஆனந்த் என்பவரின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்த போது அவர் வீட்டில் நான்கு பட்டாக்கத்திகளும் ஒரு ஒரு துப்பாக்கியும் இருந்ததைக் கண்டு கைப்பற்றி கைது செய்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.,

இந்நிலையில் காவல் நிலையத்தில் விசாரணையின் போது போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு நாசுக்காக தப்பித்து சென்று விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

இதுகுறித்து எழுமலை போலீசார் தப்பி ஓடிய விஜய்ஆனந்த் என்ற சோட்டை காதனை தேடி வருகின்றனர்.,

மேலும் இவர் மீது எழுமலை காவல் நிலையத்தில் இரண்டு அடிதடி வழக்குகளும், டி. இராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஒரு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் துப்பாக்கி மற்றும் பட்டா கத்தியுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.