• Tue. Mar 24th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சா.சி. சிவசங்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள்..,

ByT. Balasubramaniyam

Mar 23, 2026

அரியலூரில் மாவட்ட திமுக செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கரின் பிறந்த நாளை முன்னிட்டு தொமுச நிர்வாகிகள் சார்பில் சுப்ரமணிய சுவாமி கோயில், ஸ்ரீ கோதண்டராம பெருமாள் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களில் அவரது பெயரில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னதாக ராஜாஜி நகரில் செயல்படும் சாந்தம் முதியோர் இல்லத்தில் வசிக்கும் 50 ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. மேலும், அரியலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் பி.வி. அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சில் தலைவர் ஆர். மகேந்திரன் முன்னிலை வகித்தார். மேலும் பி. அய்யாதுரை, ரெ. சங்கர் மற்றும் நிர்வாகிகள் கனகராஜ், அன்பழகன், சாமிநாதன், சித்திரவேல், நடராஜன், கண்ணன், மைனர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.