• Wed. Jul 8th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

டிரான்ஸ்பார்மரை அகற்றி விட்டு புதியதாக அமைக்க கோரிக்கை..,

ByK Kaliraj

Mar 21, 2026

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் சல்வார்பட்டி ஊராட்சியை சேர்ந்தது சேது ராமலிங்கபுரம் கிராமம். இக்கிராமத்தில் இருநூருக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்கு அமைக்கப்பட்டுள்ள ட்ரான்ஸ்ஃபார்மர் அவ்வப்போது பராமரிக்கப்படாததால் மிகவும் சேதம் அடைந்து வருகிறது. ஆகையால் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. டிரான்ஸ்பார்மர் சேதமடைந்து இருப்பதால் மின்தடையை சரி செய்ய ஊழியர்கள் அச்சமடைகின்றனர்.

ஆகையால் சேதமடைந்த டிரான்ஸ்பார்மரை அகற்றி விட்டு புதியதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்