புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவிற்கு தொழுகை நடத்தச் சென்ற இஸ்லாமியர்களைக் காவல்துறையினர் ஒவ்வொருவராக பெயர் விவரம் கொடுத்த பிறகு தான் மலைக்கு செல்ல முடியும் என்று தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடைபெறும் இதற்காக அதிகாலை முதலே ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்காக மலை மீது செல்ல முற்பட்டனர்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
மலைக்குச் செல்லும் ஒவ்வொருவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்த பிறகே அனுமதிக்க முடியும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
“ஆண்டுதோறும் அமைதியான முறையில் தொழுகை நடத்தி வருகிறோம். ரம்ஜான் நாள் அதுவும் அடுத்த நிறுத்தி ஒரு ஒரு வராக அனுப்புவது சரியில்லை என்ன வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பண்டிகை காலத்தில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது மத நல்லிணக்கத்திற்கு ஆபத்தானது என்றும், இது தங்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் கூறி காவல்துறையினருடன் அவர்கள் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் காவல்துறை உதவி ஆணையர் சசி பிரியா வழக்கமாக மலை மீது செல்லும் அனைவரிடமும் கேட்கும் விவரங்களை கேட்க பிறகு தான் அனுப்ப முடியும் என்றும் புதிதாக எதுவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவே ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார்.

ஆனால் புனித ரமலான் நாள் அன்று அதிகமாக எங்களை தடுத்து நிறுத்துவது சரி இல்லை என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் மலை மேல் தொழுகை செல்லும் ஒவ்வொருவரும் தங்களது பெயர் முகவரி தொலைபேசி எண் பதிவு செய்த பின் மலைக்கு தொழுகைக்குச் சென்றனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது




