• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கரூர் அருகே வாங்கப்பாளையம் பகுதியில் போலீஸார் தீவிர சோதனை..,

ByAnandakumar

Mar 19, 2026

கரூர் அடுத்த வாங்கப்பாளையம் பகுதியில் வெங்கமேடு போலீஸார், துணை ராணுவத்தினரோடு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் உத்திரவின் பேரில், கரூர் மாநகர துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் மேற்பார்வையில், வெங்கமேடு காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில், போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

வாகன உரிமையாளர் லைசன்ஸ், வாகனத்தின் உரிமம், இன்சூரன்ஸ், சீட் பெல்ட் போட்டுள்ளனரா ? ரூ 50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்லப்படுகின்றதா ? குடிபோதையில் வாகனம் இயக்கப்படுகின்றதா ? என பல்வேறு கோணங்களிலும், தேர்தல் நடைபெறும் வேலையில் இந்த சோதனை மேலும் தீவிரப்படுத்தப்படத்தப்பட்டுள்ளது.