• Tue. Jul 7th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

ஷண்முகசுந்தரன் தலைமையில் காவலர்களுக்கு பயிற்சி வகுப்பு..,

ByP.Thangapandi

Mar 19, 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது., இந்நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் மார்ச்-30 ந் தேதி துவங்கி ஏப்ரல் 6 ந் தேதி முடிவடைகிறது., இதில் வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7 ந் தேதியும் வேட்பு மனு திரும்பப்பெற ஏப்ரல் 9 ந் தேதி நடைபெறுகிற சூழலில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதை தொடர்ந்து

இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவல்துறையினருக்கு தேர்தல் நடத்தை விதிகள் குறித்து பயிற்சி வகுப்பு உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஷண்முகசுந்தரன் தலைமையில் நடைபெற்றது.,

இதில் உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா, உத்தப்பநாயக்கனூர்,எழுமலை, எம். கல்லுப்பட்டி,டி. இராமநாதபுரம்,வாலாந்தூர், செக்கானூரணி, விக்கிரமங்கலம் உள்ளிட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு
தேர்தல் நடத்தை விதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.