• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ரோட்டின் குறுக்கே விழுந்த தென்னை மரம் அப்புறப்படுத்திய தீயணைப்பு படையினர்..,

Byசோலைஆதி

Mar 19, 2026

சோழவந்தான் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சோழவந்தான் பகுதியில் இரண்டாவது நாளாக மரங்கள் ஒடிந்து மற்றும் வேருடன் சாய்ந்து ரோட்டில் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிராம பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமரன் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் உள்பட தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று ரோட்டின் குறுக்கே விழுந்து கிடந்த மரங்களை மெஷின் ரம்பம் மூலமாக துண்டு செய்து அப்புறப்படுத்தினர்.இது மட்டுமல்லாது பத்து நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர் இந்த காற்று மற்றும் மழைக்கு சேதமடைந்துள்ளது.

கொடிக்கால் வெற்றிலை பயிர்களும் வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து வாழைத்தார்கள் சேதமடைந்துள்ளது. விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பலத்த காற்று கனமழைக்கு நேற்று பகல் முதல் மாலை வரை மின்சாரம் இல்லை.