• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ரூ.1.47 லட்சம் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பிரிவில் அலங்காநல்லூரில் இருந்து தனிச்சியம் சாலையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி பாண்டி குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்,ஏட்டு கலைச்செல்வி ஆகியோர் வாகன சோதனை செய்தனர்.

அப்போது திருமங்கலம் தங்களச்சேரியை சேர்ந்த பாண்டி கந்தசாமி ஆகியோர் ஓட்டி வந்த காரை சோதனை செய்த போது அதில் எந்தவித ஆவணமும் இல்லாமல் வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.அதேபோல் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சரளா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் காமாட்சி, ஏட்டு முத்து மாரி ஆகியோர் அலங்காநல்லூர் குமாரம் சாலையில் வாகன சோதனை செய்தனர். அப்போது கல்லணையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த காரை சோதனை செய்தபோது எந்தவித ஆவணமும் இல்லாமல் அவர் வைத்திருந்த ரூ.87,190 பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதில் பறிமுதல் செய்த ரூ.1,47,190 யை வாடிப்பட்டி தாலுகா அலுவலகத் தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரி சண்முக வடிவேல் மற்றும் உதவி தேர்தல் அதிகாரி தாசில்தார் ராமச்சந்திரன், தேர்தல் துணை தாசில்தார் கருப்பையா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்வாடிப்பட்டி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.