• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மின் வயர் விவசாய நிலத்தில் கிடப்பதால் விவசாயிகள் அச்சம்…

ByP.Thangapandi

Mar 18, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயோத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்த
பாண்டி, முத்து,பெருமாள் ஆகிய விவசாயிகள்.,

நேற்று உசிலம்பட்டி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.,

இந்நிலையில் அயோத்தி பட்டியைச் சேர்ந்த பாண்டி என்ற விவசாயத் தோட்டத்தில் கொடிக்காய் மரம் முறிந்து மின் வயரில் கிடக்கிறது., இதேபோன்று அதே கிராமத்தைச் சேர்ந்த முத்து மற்றும் பெருமாள் என்பவரின் விவசாய நிலங்களில் மின் வயர் அறுந்து மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் விவசாய நிலத்தில் கிடக்கிறது.

இதனால் விவசாய நிலங்களுக்கு சென்று வரவும் மற்றும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதற்கும் அச்சத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.