• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

காரில் 4 பேர் உயிரிழந்தது தற்கொலையாகவே இருக்கலாம்–காவல்துறை தகவல்..,

Byஜெ.துரை

Mar 18, 2026

சென்னையை சேர்ந்த முகமது ரபி என்பவர் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எரிந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே சடலமாக மீட்கபட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முகமது நபியை குடும்பத்தோடு காரில் வைத்து எரித்து யாரேனும் கொலை செய்தனரா? அல்லது அவரே குடும்பத்தோடு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீஸ் துப்பு துலக்கி வருகின்றனர்.

இந்நிலையில், முகமது ரஃபி தற்கொலை செய்து கொண்டார் என்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தீயில் எரிந்து கருகிய கார் உள்பக்கமாக பூட்டப்பட்டுள்ளது. காரில் இருந்த ஆண் நபரின் உடல் முழுவதும் எரிந்து சாம்பலாகி உள்ளது.

காரில் இருந்து மற்ற மூவரின் உடலில் எலும்பு துண்டுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதனை பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர்கள் யார் என்பதை உறுதி செய்ய தடைய அறிவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சம்பவ இடத்தில் இருந்த காரின் சேஸ் நம்பர் மற்றும் சம்பவ இடத்திலிருந்து மொபைல் போன் எண் நெட்வொர்க் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை நந்தம்பாக்கத்தில் கடன் பிரச்சனையின் காரணமாக முகமது ரஃபி வீட்டை விட்டு திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காரிலேயே உலா வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழப்பு நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக ஆத்தங்கரை பள்ளிவாசல் அருகே அவர்களது உடமைகளை தானமாக கொடுத்த சிசிடிவி பதிவுகள் வெளியாகி உள்ளது.

உயிரிழந்த பின்னர் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகே உள்ள உறவினர்களும் உயிரிழந்த நபர்களை அடையாளம் கண்டு உறுதி செய்துள்ளனர்.

முழுக்க முழுக்க இது 95%தற்கொலையாகவே இருக்கலாம் என போலீசார் கணித்துள்ள நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.