மதுரை ஆணையூரை சேர்ந்த இம்ரான் கான் இவர் விருதுநகர் தனியார் கல்லூரி படித்து வருகிறார்.

இவர் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரி செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது பசுமலை மூலக்கரை பஸ் ஸ்டாப் வந்தபோது தியாகராஜர் காலணியில் இருந்து வந்த ஒரு இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது.
இதனால் கீழே விழுந்து தலையில் பலத்த காயங்கள் பட்டு சம்பவ இடத்திலே பலியானார். மற்றொரு வாகனத்தில் வந்த நபர் பலத்த காயங்கள் பெற்று மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டார்.இது குறித்து திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.





