• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வாகன சோதனையில் ரூ.2லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சோழவந்தான் தொகுதி தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தொகுதி முழுவதும் பண பட்டுவாடாவை தடுக்கும் விதமாக கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வாடிப்பட்டி அருகே சாணம்பட்டியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி தினேஷ் குமார் தலைமையில் சப்ன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஏட்டு கனகராஜ் ஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது பெரியகுளத்தில் இருந்து வாடிப்பட்டிக்கு சித்திரவேலு என்பவர் ஓட்டிக்கொண்டு வந்த டாட்டா ஏசி வேனை சோதனை செய்தபோது எந்தவித ஆவணமும் இல்லாமல் அவர் வைத்திருந்த ரூ.1,83, 200 பறிமுதல் செய்தனர். அதேபோல் திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு சென்ற ப்ரோஸ் கான் என்பவர் ஓட்டி வந்த ஆம்னி வேனை சோதனை செய்தபோதுஎந்தவித ஆவணமும் இல்லாமல் வைத்திருந்த ரொக்க பணம் ரூ. 67 ஆயிரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த ரூ.2,50, 200 வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முக வடிவேல், மற்றும் உதவி தேர்தல் அதிகாரி தாசில்தார் ராமச்சந்திரன், தேர்தல் துணை தாசில்தார் கருப்பையா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் வாடிப்பட்டி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.