சாத்தூர் அருகே அச்சங்குளம் பகுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி மற்றும் சிறப்பு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது காரில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜெயந்திலால் மகன் பத்ரேஷ்குமார் (வயது 35). இவர் அச்சங்குளம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பட்டாசு வாங்குவதற்காக வந்திருந்தார். அவர் ரொக்கமாக ஒரு லட்சத்து 21 ஆயிரம் பணம் வைத்திருப்பது போலீசார் சோதனையில் தெரியவந்தது. இதை எடுத்து அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ, ஒரு லட்சத்தி 21 ஆயிரத்தை தேர்தல் நடத்தும் துணை அலுவலர் வடிவேலுவிடம் ஒப்படைத்தனர்.



