விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள புனல்வேலி கிராமத்தில் செயல்படக்கூடிய எஸ் பி எஸ் பி எல் 29 தொடக்க நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் 600-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக நூல் வழங்காததால் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது புதிய ரகமாக 68 அச்சு 64 ஊடையுடன் கூடிய நூல் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதை நெசவு செய்வதற்கு 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண் பார்வை குறை ஏற்படுவதால் மேலும் அச்சுகள் அனைத்தும் மாற்றி நெசவு செய்ய 10 ஆயிரத்துக்கு மேல் செலவாகும் என்பதாலும் நெசவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியும் பழைய நூலான 56 அச்சு 56 ஊடை கொண்ட நூல் வழங்க கோரியும் வேலையில்லாத காரணத்தால் மித்ரா லோன் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

வேலையில்லாத காரணத்தால் கடன் கட்ட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகையால் அரசு இழப்பீடு வழங்க கோரியும் புனல்வேலி கூட்டுறவு சங்கம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் முகவூர் கூட்டுறவு சங்கம் இராஜபாளையம் ஆவரம்பட்டி கூட்டுறவு சங்கம் தெற்கு வைத்தியநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பேட்டியளித்த நெசவாளர்கள் கூறும் பொழுது கடந்த மூன்று மாத காலமாக வேலையில்லாமல் தவித்து வருகின்றோம். எங்களுக்கு பழைய 56 அச்சு கொண்ட நூல் வழங்கினால் நெசவு செய்வதற்கு வசதியாக இருக்கும் புதிய ரகத்திற்கு 68 அச்சு 64 ஊடை வழங்குவதால் அதி வயதானவர்கள் இருப்பதால் அந்த நூல் நெசவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் பழைய நூலை வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசு கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரமடையும் என தெரிவித்தனர்.






