• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வைஷ்ணவி தலைமையில் ஐஏஎஸ் அகாடமியின் புதிய கிளை பயிற்சி மையம் துவக்க விழா..,

BySeenu

Mar 16, 2026

இந்தாண்டு வெளியான ஐஏஎஸ் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற 39 பேர் தமிழக அளவிலும், நாடு முழுவதும் 200 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அதன் பங்குதாரர் வைஷ்ணவி தெரிவித்துள்ளார்…..

குடிமை பணியாளர் தேர்வுக்கான பிரபல பயிற்சி மையமான சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் புதிய கிளை பயிற்சி மையம் கோவை 100 அடி சாலையில் துவங்கப்பட்டது. முன்னதாக அதன் மேலான் பங்குதாரர் வைஷ்ணவி தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில் பங்கேற்ற கோவை மாவட்ட நீதிபதி விவேகானந்தன் மற்றும் கடந்தாண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் தேசிய அளவில் பதினெட்டாம் இடமும் தமிழக அளவில் மூன்றாம் இடமும் பெற்று தேர்ச்சி அடைந்த சுருதி ஆகியோர் குத்துவிளக்கேற்றி பயிற்சி மையத்தை துவக்கி வைத்தனர்.

அப்போது பேசிய சுருதி, யுபிஎஸ்சி தேர்வு கஷ்டமாக இருக்கும் என நினைக்காமல் இலக்கை உயர்வாக நிர்ணயித்து செயலாற்ற வேண்டுமென்றார். இதைத் தொடர்ந்து பேசிய சங்கர் ஐ ஏ எஸ் அகாடமியின் மேலான் பங்குதாரர் வைஷ்ணவி, கோவை மட்டும் இன்றி சேலம்,மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழகத்தை தவிர கேரளா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட இடங்களிலும் குடிமை பணியாளர்கள் தேர்வு பயிற்சி மையத்தை நடத்தி வருவதாகவும் இந்த ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவில் தேசிய அளவில் 958 தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து 59 முதல் 60 பேர் தேர்வு செய்யப்பட்டதாகவும் அதில் 39 பேர் தங்களது அகாடமியில் படித்தவர்கள் என்றும் இந்தியா முழுவதும் 200 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்தவர்கள் என்றும் குறிப்பிட்டார்.மேலும் தற்போது புறநகர் பகுதியில் இருந்து அதிகமானோர் பயிற்சி பெற்று வருவதாகவும் குறிப்பாக இந்த ஆண்டு தேர்வில் 17 பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளது .

பெண்களின் முன்னேற்றமாக பார்ப்பதாகவும் மாற்றுத் திறனாளி மாணவர்களும் தற்பொழுது முன்னேற்றம் பெற்று வருவதாகவும் கூறியதுடன் இந்த ஆண்டு தங்கள் அகாடமியில் இருந்து நான்கு மாற்றத்திறனாளிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் மிக சிறப்பாக வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதேபோல் சாதாரண நிலையில் இருந்தவர்களும் பெரிய முயற்சி எடுத்து நல்ல ஒரு நிலையில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் கூறினார்.