• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு தீவிர வாகன சோதனை..,

ByP.Thangapandi

Mar 16, 2026

உசிலம்பட்டியில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் *

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு அமலில் உள்ள நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை- தேனி மாவட்டத்தை இணைக்கும் ஆண்டிபட்டி கணவாய் பகுதிக்கு கீழே உள்ள தொட்டப்பநாயக்கனூர் அருகில் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் வாகன தணிக்கையை தீவிர படுத்தியுள்ளனர்.

இதில் கூட்டுறவு தணிக்கை அலுவலர் சதீஷ் பிரபு மற்றும் காவல்துறை எஸ்.எஸ்.ஐ செல்வக் குமாரி தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் வாகன எண், பெயர், செல் நம்பர் உள்ளிட்டவைகளை பதிவு செய்து ஆவணங்களை சரிபார்த்து, பொருட்கள் எதுவும் எடுத்துச் செல்லப்படுகிறதா என சோதனையிட்ட பின் வாகனங்களை அனுமதிக்கின்றனர்.

மேலும் பணம்,நகைகள் உள்ளிட்ட பொருட்களையோ உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

அதேபோன்று உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி எல்லைப் பகுதிகளான உத்தப்பநாயக்கனூர், செக்கானூரணி ரயில்வே கேட், சேடப்பட்டி, எழுமலை, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.