மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில்பாரத ஸ்டேட் வங்கி முன்பாக வாடிப்பட்டி பேரூர், வடக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் செயலாளர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர், முன்னாள் பேரூராட்சித் தலைவர் கிருஷ்ண வேணி, முன்னாள் பேரூர்செய லாளர் பிரகாஷ், அயலக அணி மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக்,வழக்கறிஞர் கோகுல்நாத் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேசன் எம். எல். ஏ., ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் குருசாமி, நகர தலைவர் முருகானந்தம், வட்டாரத் தலைவர் ஐ.கே. குருநாதன், தே.மு.தி.க மாவட்டத் துணைத் தலைவர் கர்ணன், பேரூர் செயலாளர் பாலாஜி, ஒன்றிய செயலாளர் நாகராஜ்,விடுதலை சிறுத்தைகள் மாவட்ட நிர்வாகி விடுதலை வீரன் பேரூர் செயலாளர் அரசு விஜயார், வாடிப்பட்டி வளவன் ,கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். முடிவில் கவுன்சிலர் ஜெயகாந்தன் நன்றி கூறினார்.



