• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மக்களை தேடி மருத்துவ ஊழியர் காத்திருப்பு போராட்டம்..,

ByT. Balasubramaniyam

Mar 12, 2026

அரியலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு, மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் (சிஐடியூ ) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டத்திற்கு சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் மு இளவரசி தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் கு.சங்கீதா காத்திருப்பு போராட்டத்திற்கு முன்னிலை வகித்தார். காத்திருப்பு போராட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ரஞ்சிதா வரவேற்றார்.தொடர்ந்து மக்களை தேடி மருத்துவ ஊழியர்களை சுகாதாரத்துறை ஊழியர்களாக தமிழக அரசு அங்கீகாரம் செய்ய வேண்டும், மக்களை தேடி மருத்துவ ஊழியர்களுக்கு சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வழங்குவதை போல சம்பள உயர்வு வழங்கிட வேண்டும்.

பணி நேரத்தை வரன்முறை செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 30க்கும் மேற்பட்ட பெண் சுகாதார தன்னார்வலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.