• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அதிமுக கூட்டணியை தமிழக வாக்காளர்கள் கிளீன் போல்ட் செய்வார்கள்-உதயநிதி ஸ்டாலின்..,

ByT. Balasubramaniyam

Mar 12, 2026

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில், மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் மறைந்த முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகிய தலைவர்களின் சிலைகளையும், ஒன்றிய திமுக அலுவலங்களையும் திறந்து வைத்து அவர் பேசியதாவது: பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும் கலைஞரின் லட்சியங்களையும் நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தான் தமிழ்நாடு முழுவதும் பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞருக்கு பல்வேறு இடங்களில் சிலைகளை திறந்து வைக்கிறோம்.

மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும், எந்த திட்டத்தையும் கொடுக்கவில்லை தமிழக அரசு கேட்கின்ற நிதியையும் கொடுப்பதில்லை.

ஆனால் நாம் செயல்படுத்துக்கின்ற எல்லா திட்டத்திற்கும் ஏதாவது தொந்தரவை மத்திய அரசு தடுத்து வருகிறது.

கல்விக்கான நிதி ரூ.3,800 கோடியை தரவில்லை, குடிநீர் திட்டத்திற்கான நிதியும் தரவில்லை. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தையும் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளது.

இன்று பாசிச பாஜக அரசு சுரண்டப்படுகின்ற மாநிலமாக வஞ்சக்கப்படுகின்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

இந்த அநியாயத்திற்கு எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி துணை போகின்றார். .

பாஜகவோடு அதிமுக ஒன்றோடு ஒன்றாக கலந்து போய்விட்டது. வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை பாஜகவோடு இணைத்து விடுவார்.

ஏனென்றால் அவருக்கு அதை விட்டால் வேறு வழி இல்லை. வருமானவரித்துறை, சிபிஐ விசாரணை என சொல்லி அதிமுக முன்னாள் அமைச்சர்களை எல்லாம் மிரட்டி வைத்துள்ளார்கள்.

இது போன்று திமுகவை மிரட்டி பார்த்தார்கள். ஆனால் திமுக வருமான வரித்துறை சிபிஐ விசாரணைக்கு எல்லாம் பயப்படுகிற கட்சி கிடையாது.

எடப்பாடி பழனிச்சாமி பயப்படலாம் ஆனால் கருணாநிதியின் உடன்பிறப்புகள் எந்த உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டார்கள்.

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கும் எண்ணம் அமிஷாவிற்கு நிச்சயமாக கிடையாது. பிகாரில் பார்த்திருப்பீர்கள். 10 தடவை முதல்வராக இருந்த நிதிஷ்குமாரை ஏமாற்றியுள்ளார்கள்.

அமித்ஷா உடைய நோக்கம் அதிமுகவை எப்படியாவது அபகரித்து விடலாம் என்ற எண்ணம் தான்.

அதிமுக அடிமை அதிமுகவாக மாறியுள்ளது .இப்படி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் எடப்பாடி பழனிச்சாமி தில்லி பாஜக-விடம் அடகு வைக்க பார்க்கிறார்.

எனவே வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தில்லி பாஜக

அணியை மொத்தமாக தமிழ்நாட்டு மக்கள் கிளீன் போல்ட் செய்வார்கள். அதற்கு திமுகவினர் தாய்மார்கள் ஒவ்வொருத்தரும் களத்தில் தீயாய் வேலை செய்யணும்.

திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேருங்கள். தமிழ்நாட்டுக்கு வருகின்ற ஆபத்துகளை மக்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறுங்கள் தமிழ்நாட்டை பாதுகாக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்.

அப்போது தான் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க முடியும் என்றார்.

பின்னர் தேவனூர் கிராமத்தில், கட்டப்பட்டுள்ள மறைந்த எம்.பி எஸ். எஸ். சிவசுப்பிரமணியன் நினைவு நூலகம், கணினி பயிற்சி மையம் மற்றும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை திறந்து வைத்து பார்வையிட்டார்.

விழாவுக்கு மாவட்ட திமுக செயலாளர், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமை வகித்தார். திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்பி நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் க.சொ.க.கண்ணன்,பிரபாகரன், திமுக சட்ட திட்ட திருத்த குழு இணைச் செயலாளர் சுபா .சந்திரசேகர்,மாநில இளைஞர் அணியின் துணைச் செயலாளர் ஆனந்தகுமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்டக் திமுக துணை செயலாளர்கள் மு.கணேசன், லதா பாலு, அருங்கால் சந்திர சேகரன், மாவட்ட பொருளாளர் கு. இராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.பாலு , சுமதி , வி.எம். ஷாஜகான், ஒன்றிய திமுக செயலாளர்கள் தனசேகர், கலியபெருமாள்,செந்தில்குமார், இரா மணிமாறன், கணேசன், அண்ணாதுரை, தனவேல், இரா கென்னடி, ரெஅசோகச் சக்கர வர்த்தி, கே ஜி எஸ் முருகன், கோ அறிவழகன், மா.அன்பழகன், பூ செல்வராஜ், வி எழில்மாறன் , பொன் செல்வம்,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தெய்வ இளையராஜன்,நகரச் செயலாளர் கள் வெ.கொ .கருணாநிதி, இரா. முருகேசன், மாவட்டத் திமுக இளைஞர் அணி துணை அமைப் பாளர்கள் வீரசிவா, சுபா வசந்த பகலவன், தமிழ்மாறன், குணசீலன், எஸ்.ஆர்.முருகேசன், தர்மராஜ், உள்ளிட்ட மாவட்ட ,ஒன்றிய நகர,சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.