• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சமயநல்லூரில் மகளிர் தின விழா பொதுக்கூட்டம்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே திருவாலவாயநல்லூர் பிரிவில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தென்னக மக்கள் இயக்கம் தென்மாவட்ட வ.உ.சி. பேரவை சார்பாக மகளிர் தின விழா பொதுக்கூட்டம் நடந்தது.

இந்த கூட்டதிற்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர் அணி தலைவி அன்னலெட்சுமி சகிலாகணேசன் தலைமை தாங்கினார். வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஹரிஹரூண் மாநில அமைப்பாளர் தூபாய் மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் அணி ராம்குமார் வரவேற்றார். தென்னக மக்கள் இயக்கம் நிறுவன தலைவர் ஐயப்பாகார்த்தி சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் தீர்மானமாக மாற்று சமுதாயத்திற்கு வழங்கிய வேளாளர் குறித்த அரசாணையை இரத்து செய்ய வேண்டும். 42 உட்பிரிவு வேளாளர் ஓருங்கிணைந்து அரசாணை வெளியீட வேண்டும். சோழவந்தான் இரயில்வே மேம்பாலத்திற்கு புவலர் அரஞ்சண்முகனார் பெயர் வைக்க வேண்டும் உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் புதிய நீதி கட்சி நிர்வாகி வெங்கடாச்சலம் மாநில துணை தலைவர் பிரவீன் உள்பட 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.