• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

அரசியல் டுடே “செய்தியின் எதிரோலி “!

ByPuthar Pandian P

Mar 9, 2026

மதுரை – திண்டுக்கல் ரெயில்வே பாதை தண்டவாளத்தில் மேம்பாலத்தின் கீழ் பாதுகாப்பு பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மதுரையில் இருந்து சோழவந்தான், கொடைரோடு வரை பழைய ரெயில்வே தண்டவாளங்கள், ஸ்லீப்பர் சிமெண்ட் கட்டைகள் மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ரெயில்வே தண்டவாளம் மாற்றப்பட்ட இடங்களில் ஜல்லி கற்கள் கொட்டி சீர் அமைக்கும் பணிகள் நடக்கிறது.

ஆனால் கொடைரோடு – நிலக்கோட்டை செல்லும் சாலை ரெயில்வே மேம்பாலம் இருக்கிறது. அந்த மேம்பாலத்தில் மேல் தண்டவாளங்கள் புதியதாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் ஜல்லி கற்களை தண்டவாளங்கள் இடையே ஓரத்திலும் சீரமைக்க ஜே.சி.பி. எந்திரத்தை பயன்படுத்தி பணிகள் செய்தனர்.

அப்போது ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே சாலையில் வாகன ஓட்டிகள், மோட்டார் சைக்கிள், நடந்து செல்லும் மக்கள் மீது ஜல்லி கற்கள் விழுந்து ஆபத்தான நிலையில் பணிகள் நடக்கிறது என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். என செய்தி வெளியிடப்பட்டன. தற்போது இன்று ரெயில்வே மேம்பாலத்தில் வேலை செய்யும் போது கீழே சாலையில் பாதுகாப்பு ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். சாலையில் வரும் வாகனங்கள், மோட்டார் சைக்கிள் வருபவர்கள் நிறுத்தி பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.