• Sun. Mar 8th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

திமுக வெங்கடேசன் எம் எல் ஏ வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு..,

ByKalamegam Viswanathan

Mar 8, 2026

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் ஆதனூர் முதல் சால்வார்பட்டி வரை தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக சோழவந்தான் திமுக வெங்கடேசன் எம் எல் ஏ ஆதனூர் அருகே உள்ள பகுதிக்கு வருகை தந்தார்.

அப்போது அங்கிருந்த பெரியவர் உள்ளிட்ட சிலர் கடந்த சில வருடங்களாக தங்கள் பகுதிக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராத எம்எல்ஏ தங்கள் ஊருக்கு வர கூடாது ஓட்டு கேட்டும் வரக்கூடாது என ஒருமையில் பேசியும் வாய் கூசும் அளவுக்கு வார்த்தையில் பேசியும் அவமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து எம்எல்ஏ உடன் வந்த அவரின் ஆதரவாளர்களும் ஆதனூர் கிராமத்தில் உள்ள திமுகவினரும் எம்எல்ஏவிடம் கேள்வி கேட்ட பெரியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நமது பிரச்சனைகளை தனியாக பேசிக்கொள்ளலாம் பொது இடத்தில் எம்எல்ஏ வை அவதூறாக பேசக்கூடாது என ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அவரிடம் எம் எல் ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்டார் உடனடியாக அங்கிருந்த அவரின் ஆதரவாளர்கள் அவசர அவசரமாக நிகழ்ச்சியை முடித்து வைத்து எம்எல்ஏ வை அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு அங்கிருந்தவர்கள் பேசுகையில்,

உதவி பணம் பெறுவதற்கும் பட்டா கொடுப்பதற்கும் கலைஞர் கனவு இல்லத்தில் வீடு கட்டி கொடுப்பதற்கும் பணத்தை வாங்கிக் கொண்டு பணிகளை செய்து கொடுப்பதில்லை என அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.

மேலும் பொது இடத்தில் இது போன்று நடப்பது நல்லதல்ல என ஒருவரை ஒருவர் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஐந்து வருடங்களாக சோழவந்தான் சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு குறிப்பிட்டு சொல்லும் அளவில் எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்தாத சோழவந்தான் திமுக வெங்கடேசன் எம்எல்ஏவுக்கு தொகுதியின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில்,

அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் தார் சாலை அமைக்க பூமி பூஜை போடுவதற்கு வந்த இடத்தில் தங்கள் பகுதிக்கு திமுக எம்எல்ஏ வான வெங்கடேசன் வரக்கூடாது ஓட்டு கேட்டும் வரக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்எல்ஏவிடம் கூறிய கிராம பெரியவர் வெட்கம் இல்லாமல் எங்கள் ஊருக்கு வருகிறாயே என தகாத வார்த்தையை பேசியதாக அங்கிருந்தவர்கள் பெரியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.