• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கல்லூரி கலையரங்கில் சர்வதேச மகளிர் தின விழா..,

ByK Kaliraj

Mar 7, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை அறிவியல் கல்லூரியின் மாணவர் ஆலோசனை மையமும் உள் புகார் குழுவும் இணைந்து கல்லூரி கலையரங்கில் சர்வதேச மகளிர் தின விழாவை நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்அல்லாத பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் தொடக்கமாக, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி .தீபாலெட்சுமி வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் .பாலமுருகன் தலைமையுரை வழங்கினார். அவர்தம் தலைமையுரையில், முன்னேற்றமான சமுதாயத்தை உருவாக்குவதில் மகளிர் அதிகாரமளிப்பு, கல்வி மற்றும் தலைமை திறன்களின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

மேலும் இத்தகைய சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாணவர் ஆலோசனை மையத்தையும் உள் புகார் குழுவையும் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து வணிகவியல் (கணினிப்பயன்பாட்டியல்) துறைத்தலைவர் நளாயினி வாழ்த்துரை வழங்கி, சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிகழ்விற்குக் கல்லூரியின் முன்னாள் மாணவிகளான, புதுக்கோட்டை, ராணீஸ் அரசுப் பள்ளி, விலங்கியல், முதுநிலை ஆசிரியர் ரேகா, மற்றும் திருச்சி மாவட்டம், வெங்கைக்குறிச்சி, அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர், முருகஜோதி, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ரேகா, தனது உரையில், மாணவிகளுக்கு வாழ்க்கையில் வெற்றி பெற கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தொடர்ச்சியான கற்றல் முக்கியம் என்பதை எடுத்துரைத்தார். மேலும் தனது கல்விப் பயணம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து, மாணவிகளுக்கு உற்சாகமும், இலக்குகளை அடைய வழிகாட்டலையும் வழங்கினார்.
.முருகஜோதி தனது உரையில், திட்டமிடல், உறுதி மற்றும் பொறுமை மூலம் மாணவிகள் தங்கள் இலக்குகளை எட்ட முடியும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் எதிர்கால சவால்களை சமாளிப்பது எப்படி என்பதையும் மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்கள் வழங்கிய உரைகள் மாணவிகளுக்கு மிகுந்த ஊக்கம், தன்னம்பிக்கை மற்றும் செயல்திறன் உணர்வை அளித்தது. சிறப்பு விருந்தினர்களின் உரைகள் மாணவிகளுக்கு உற்சாகம் மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, சமூகத்தில் மதிப்புமிக்க பங்களிப்புகளை வழங்கும் வகையில் பெண்களை ஊக்குவித்தது.

நிகழ்ச்சியின் நிறைவாக, இளங்கலை இரண்டாமாண்டு உயிரித்தொழில்நுட்பவியல் துறை மாணவி .லக்ஷண்யா நன்றியுரை வழங்கினார். 870 மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.