• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கத்திரிக்காய் அதிகளவு சாகுபடி..,

ByK Kaliraj

Mar 7, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தெற்கு ஆனை கூட்டம், சுப்ரமணியபுரம், மம்சாபுரம், கோதை நாச்சியார்புரம், கணஞ்சாம்பட்டி, கங்கர் சேவல், ரெட்டியாபட்டி, விஜய கரிசல்குளம், உள்ளிட்ட பகுதியில் கத்திரிக்காய் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கத்திரிக்காய்க்கு தினந்தோறும் தேவை இருப்பதால் இப்பகுதியில் தொடர்ந்து பயிரிடப்பட்டு வருகிறது. கத்திரிக்காய் பயிரிடப்பட்ட இரண்டரை மாதத்தில் இருந்து காய்கள் கொடுக்க தொடங்குகிறது. தொடர்ந்து மூன்று மாதம் வரை காய்களை பறிக்க முடியும். கிணற்று பாசனத்தில் அவ்வப்போது மருந்து தெளித்தும், களைகளை அப்புறப்படுத்தியும், முறையாக பராமரிக்க வேண்டும். மற்ற காய்கறி பயிர்களை விட கத்தரிக்காய்க்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.பராமரிக்காமல் விடப்பட்டால் கத்தரிக்காய் முழுவதும் வீணாகிவிடும்.

கத்தரிக்காய் அறுவடைக்கு பின்பு விற்பனை செய்வதற்கும் எளிதானது. கிலோவிற்கு எண்பது ரூபாய்க்கு மேல் விற்பனையாவதால் போதிய லாபமும் விவசாயிக்கு கிடைத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் நள்ளிரவில் மழை பெய்ததால் தோட்டத்தில தண்ணீர் தேங்கி வேர் அழுகல் நோயினால் காய்கள் சேதமடைந்து விட்டன. இதனால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தெற்கு ஆனை கூட்டம் விவசாயி வெங்கடேஷ் கூறியது
கத்திரிக்காய் மூலம் தொடர்ந்து லாபம் கிடைத்து வருவதால் இப்பகுதியில் கத்திரிக்காய் சாகுபடி செய்து வருகிறோம். சமூகத்தில் இரவு நேரங்களில் இது மழையின் காரணமாக செடிகளில் வேர் அழுகல் நோய் தாக்கியதில் காய்கள் முழுவதும் சேதமடைந்து விட்டன. தற்போது அறுவடை நடைபெற்று வருவதால் அறுவடை செய்யப்பட்ட காய்கள் 100 கிலோ இருந்தால் அதில் 30 முதல் 50 சதவீதம் காய்கள் மட்டுமே நன்றாக உள்ளது. மீதி காய்கள் வீணாகி விடுகின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.தழிழக அரசு இதற்குரிய நஷ்டஈடு வழங்க வேண்டுமென கூறினார்.