சிறுமடைலிங்கம் எஸ்.கலைமகள் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,ஆனந்த் சிவம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “செல்லமடா நீ எனக்கு”
இத் திரைப்படத்தில் வசீகரன்,நேகா, போஸ் வெங்கட்,செந்தி,
அமுதவாணன் மீரா கிருஷ்ணன்,ரிஷா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நாயகன் வசீகரன் நாயகி நேகா மீது காதல் கொள்கிறார். நாயகன் வசீகரனுக்கு அவரது தாயின் மீது சிறுவயதிலிருந்தே வெறுப்பை காட்டிக் கொண்டு வருகிறார்.
இதைப் புரிந்து கொண்ட காதலி நேகா காதலன் வசீகரனுக்கு உனது தாய் உனக்காக எவ்வளவு தியாகம் செய்து இருக்கிறார்கள் என்று உனக்கு தெரியுமா? என அவரது தாயின் பல வருட ரகசியத்தை போட்டு உடைக்கிறார்.
இதை கேட்ட நாயகன் தன் தாயுடன் இணைந்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

தன் தாயை வெறுக்கும் கோபமான நடிப்பு காட்சிகளும்,தனது தாயின் தியாகத்தை உணர்ந்த பின்னர் அவர் தவிக்கும் தவிப்பின் நடிப்பும் பார்வையாளர்களை கிரங்கடித்துள்ளார் வசீகரன்.
படத்தின் நாயகி நேகா அழகாக நடித்து பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
குறைவான காட்சிகளில் வந்தாலும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தனது அனுபவ நடிப்பை கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்து உள்ளார் போஸ் வெங்கட்.
அமுதவாணன்,மீரா கிருஷ்ணன்,ரிஷா,
தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கேற்றவாறு சிறப்பாக நடித்துள்ளனர்.
நாயகன் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பசங்க’ செந்தி,தன் மகனின் பாசத்துக்காக ஏங்கி நிற்கும் அந்தப் பாச போராட்ட காட்சிகள் பார்ப்போரின் மனதை கலங்கடிக்கிறது.
தாயை வெறுக்கும் மகனும் மகனுக்காக வாழும் தாய் என்ற ஒரு அடிப்படை கதை களத்துடன் உறவுகளையும் காதலையும் ஒன்றிணைத்து உருவாக்கியுள்ளார்.
இயக்குனர் ஆனந்த் சிவம்.

தாஜ்மீர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு நிறைவை தந்துள்ளது.
படத்தின் ஒளிப்பதிவாளர் செல்வா.ஆர் படத்தின் காட்சிகளை சிறப்பாக எடுக்க முயற்சித்துள்ளார்.
மொத்தத்தில் “செல்லமடா நீ எனக்கு”ஒரு தாயின் பாச போராட்டம்!



