• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

குமரியில் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு..,

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினினுக்கு. நாகர்கோவிலில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் திரளாக கட்சியினர் திரண்டு வரவேற்றனர்.

வடசேரியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

கூடியிருந்த கட்சியினரை பார்த்து. நாகர்கோவிலுக்கு நான் இதற்கு முன்பும் பல முறை வந்திருக்கிறேன்.

குமரிக்கு வரும்போதெல்லாம் உங்களின் அன்பான அணுகுமுறையை பார்த்திருக்கிறேன். இப்போதும் உங்களது எல்லை இல்லா அன்புக்கு தலைவணங்குகிறேன்.

தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வரவிருக்கிறது. நம் தலைவர் மீண்டும் முதல்வராக,நம் தலைவர் தலைமையில், தமிழகத்தில் தொடர்ந்து தி.மு.க. ஆட்சி தொடர நாம் எல்லாம் உறுதிமொழி எடுத்து களத்தில் பணியாற்றுவோம்,வெற்றி காண்போம்
என தெரிவித்தார்.

தொடர்ந்து.குமரி ஆட்சியர் அலுவலகம்,குலசேகரம் விளையாட்டு திடல், குளச்சல் அயலகத்துறை புதிய அலுவலகம் திறப்பு. இதனை தொடர்ந்து. இறச்சகுளம் பகுதியில்
தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில்.புதிதாக நிறுவப்பட்டுள்ள
சட்டமேதை அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கிறார்.