விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் அஇஅதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவர்மன், சுப்பிரமணியன், மற்றும் பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்ற கழக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா கழக செய்தி தொடர்பாளர் அதிவீர ராம பாண்டியன் மற்றும் நகர ஒன்றிய கழகச் செயலாளர்கள் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணி ராஜவர்மன் மற்றும் சிறப்பு பேச்சாளர்கள் என அனைவரும் மீண்டும் எடப்பாடியார் ஆட்சி வரவேண்டும் என்றும் அதற்கு பொதுமக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இறுதியாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன் வேஷ்டி சேலைகளை வழங்கினார். அப்போது கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முககனி தங்களது ஒன்றியத்திற்குட்பட்ட மகளிரை ஒதுக்குவதாகவும் அவர்களுக்கு டோக்கன் வழங்கவில்லை எனவும் மேடையிலேயே கேட்டதற்கு அங்குள்ளவர்கள் எதிர்க் குரல் எழுப்பவும் அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் எதிர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.பின்னர் எம் எஸ் ஆர் ராஜவர்மன் சமாதானப்படுத்த முயன்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள் அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்த நிலையில் கடைசிவரை சேலை கிடைக்காமல் ஏமாற்றத்தில் திரும்பினர்.

கூட்டத்திற்கு வந்தால் சேலை கிடைக்கும் என்று அழைத்து வந்ததாகவும் ஆனால் தற்பொழுது சேலை வழங்கி வில்லை என்றும் புலம்பியபடி கலைந்து சென்றனர்.
களைகட்டிய பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் கலகத்தை ஏற்படுத்தியதால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் அவசர அவசரமாக கலைந்து சென்றனர். சேலைக்காக காத்திருந்த பெண்கள் அனைவரும் ஏமாற்றத்தில் வீடு திரும்பினர்.







