• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

முதுபெரும் தலைவர் ஆர் நல்ல கண்ணு மறைவிற்கு புகழஞ்சலி கூட்டம்..,

ByT. Balasubramaniyam

Feb 28, 2026

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு மறைவையொட்டி அரியலூரில் அண்ணா சிலை அருகில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் ஒன்றியக்குழு சார்பாக புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

ஒன்றிய செயலாளர் தோழர் து. பாண்டியன், தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் டி தண்டபாணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு க. கிருஷ்ணன், மதிமுக நகர செயலாளர் வழக்கறிஞர் மனோகரன், தேமுதிக மாவட்ட செயலாளர் இராம. ஜெயவேல், திமுக ராஜேந்திரன், திராவிடர் கழகம் சிவ கொழுந்து ஆகியோர் தோழர் நல்லகண்ணு வாழ்க்கையின் தியாகங்களை நினைவு கூர்ந்து இரங்கல் உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் கே. சிவக்குமார்,ஜெயங்கொண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் டி.கே.காத்தவராயன், ராமன் அரியலூர் ஒன்றிய துணைச் செயலாளர் ந. கோவிந்தசாமி, ஒன்றிய பொருளாளர் மொ. மணி, அரியலூர் நகராட்சி ஏஐடியுசி செ. மாரியப்பன், பா. காத்தவராயன், மாதர் சங்கம் மா. நல்லம்மாள், சி. சுபலெட்சுமி, கல்லக்குடி கிளை ஆ. பெரியசாமி, ம. பசுபதி, நாகமங்கலம் எஸ் பச்சமுத்து, கயர்லாபாத் த. ராயதுரை, நகர கிளை முருகேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி P. துரைசாமி, R. சிற்றம்பலம், து. அருண், அருண் பாண்டியன் உட்பட பலர் புகழஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டனர். இறுதியில் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.