இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன் முறையாக பட்டுக்கோட்டை அருகே மனோராவில் கடல் பசு பாதுகாப்பு மையம் – தஞ்சை மாவட்டத்தின் சுற்றுலாத்தலமான மனோராவில் ரூபாய் 40 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் கடல் பசு பாதுகாப்பு மையம் மற்றும் ஆராய்ச்சி மையப் பணிகள் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது –
பேட்டிகள்.
- அசோக்குமார் – பேராவூரணி எம்.எல்.ஏ
- டாக்டர். காஞ்சனா – திருச்சி மண்டல வனப்பாதுகாவலர்

தஞ்சை மாவட்டத்தின் சுற்றுலாத்தலம் பட்டுக்கோட்டை அடுத்த மனோராவில் ரூபாய் 40 கோடியே 94 லட்சம் செலவில் கடல் பசு பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என்று கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பின்னர் கடந்த 17ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் கடல் பசு பாதுகாப்பு மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து மனோராவில் கடல் பசு பாதுகாப்பு மையம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான களப்பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார், திருச்சி மண்டல வன பாதுகாவலர் டாக்டர் காஞ்சனா மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு களப்பணிகளை துவக்கி வைத்தனர்.

அழிந்து வரும் கடல் பசு இடத்தை பாதுகாக்கவும் கடல் மீன்கள் கடல் தாவரங்கள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்யவும் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் இந்த மனோராவில் கடல் பசு பாதுகாப்பு மையம் துவங்கப்பட உள்ளது. சுமார் 443 சதுர கிலோ மீட்டர் பகுதியை உள்ளடக்கிய கடற்பகுதியை கடல் பசு பாதுகாப்பை முக்கியமாக கொண்டு இந்த கடல் பசு பாதுகாப்பு மையம் அமைய உள்ளது.







