• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

நம்பிக்கை ஊட்டும் வகையில் சிலர் மீட்சி எடுப்பார்கள்-ஆர்.பி.உதயக்குமார்.,

ByP.Thangapandi

Feb 26, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர கழக அலுவலகத்தில் வரும் மார்ச் 1 ஆம் தேதி மதுரை வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி – யை வரவேற்பது குறித்தும், பொதுக்கூட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது., இதில் உசிலம்பட்டி நகரம், செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றிய கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.,

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயக்குமார்.,

திமுக கூடாரத்தில் நடுங்கி போய்ருக்கிறார்கள், திமுக கூட்டணி கட்சிக்குள் குழப்பத்தில் இருக்கிறார்கள்., ஆகவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைவது உறுதி ஜனநாயக ஆட்சிக்கு மகுடம் சூட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள்.,

அதிமுக, அம்மாவின் ஆட்சி என்றால் எடப்பாடி பழனிச்சாமி என்பதை இந்த தாய் தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் ஏகமனதாக ஒருமனதாக ஏற்றுக் கொண்டிருப்பதை தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்., அதைத்தான் பார்க்க போகிறோம்.,

தவெக தலைவர் விஜய் தவெக விற்கும், திமுகவிற்கு மட்டுமே போட்டி என பேசி வருவது குறித்த கேள்விக்கு.,

பரீட்சை எழுத போகும் அனைவருமே பாஸ் ஆகிவிடுவேன் என்று தான் சொல்வார்கள், பரீட்சை எழுதிய பின்னர் தான் தெரியும் பாஸ் ஆகியவர்கள் யார், தோல்வியடைபவர்கள் யார் என்று தோல்வியடைபவர்கள் நம்பிக்கையோடு பாஸ் ஆகிவிடுவேன் என்று சொல்வது தப்பு ஒன்றும் இல்லை., ஏற்கனவே உள்ள நடைமுறை தான்., அதே போல தமிழ்நாட்டில் நடந்துள்ளது வரலாறு., அதனால் தொண்டர்களுக்கு, மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் மீட்சி எடுப்பார்கள் அதை பற்றி பொருட்படுத்த தேவையில்லை., தேர்வில் வெற்றி பெறுபவர்களும், தோல்வி அடைபவர்களும் என எல்லோரும் சொல்வதை அவர்களும் சொல்கிறார்கள்., தீர்ப்பு வந்த பின் யார் பாஸ் ஆக போகிறார்கள்., யார் பாஸ் ஆ இருக்க போகிறார்கள், யார் மாஸ் ஆ இருக்க போகிறார்கள் என பொருத்திருந்து பார்க்கலாம்.,

தேர்தல் ஆணையம் கூட்டங்களை நடத்தி வருகிறது தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகளை பொருத்திருந்து பார்க்கலாம்., என பேட்டியளித்தார்.