• Wed. Feb 25th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வர் குமரியில் முதல் தேர்தல் பரப்புரை..,

தமிழக முதல்வர் நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில். நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களை தொடங்கியும் வைத்தார்.

நிகழ்வில் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர்.

நாகர்கோவிலில் நகராட்சி பூங்காவில். குமரியின் கோமேதகம், தமிழக சட்டமன்ற எதிர் கட்சி தலைவராகவும். கேரளா, மற்றும் குமரி மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து. குமரி மாவட்டம் மக்களுக்கு பொன்னப்பநாடார் செய்த மக்கள் பணிகளை வரிசை படுத்தினார்.

நான் வந்திருப்பது குமரி மாவட்டம்.இங்கே உள்ள காங்கிரஸ் கட்சியினர் புதிய திட்டங்களை அறிவிக்காது போனால்,என்னை சும்மா விட்டு விடுவார்களா…..?
உரிமையோடு கேட்பார்கள். தமிழகத்திற்கு மோடி எத்தனை முறை படையெடுத்தாலும் வெற்றி பெற முடியாது.

புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து, பாஜக தமிழகத்தை ஆட்சி செய்யவே முடியாது.
மகளீர் உரிமை தொகையாக தேர்தல் அறிவிப்பை காண்பித்து நிறுத்தி விடலாம் என டெல்லி போட்ட திட்டத்தை முன் கூட்டியே உணர்ந்த நாம். மகளீர் உதவி தொகை மூன்று மாதங்களுகும், சிறப்பு தொகையையும் சேர்த்து ரூ.5000.00 த்தை அவர்களது வங்கி கணக்கில் சேர்த்து விட்டோம்.

மேடி வாயால் ஒரு வடை சுட்டால்,அவரது அடிமை பழனிச்சாமி பல வடிவங்களில் வடை சுடுகிறார். தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சியே அமையும் என தெரிவித்தார்.

நிகழ்வில் அமைச்சர்கள் மனோதங்கராஜ், அனிதா ராமகிருஷ்ணன், கீதாஜூவன், டி.ஆர்.பி.ராஜா, குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார்,தாரகை கத்பட். குமரி ஆட்சியர் அழகு மீனா இ.ஆ.ப, நாகர்கோவில் மேயர் மகேஷ், தமிழக உணவு கழகம் தலைவர் சுரேஷ் ராஜான் உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த அரசின் அதிகாரிகளும் பங்கேற்றார்கள்.