• Wed. Feb 25th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

விடுதலைப் போராட்ட தியாகிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..,

Byமுகமதி

Feb 24, 2026

இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட தியாகிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட தியாகிகளின் குடும்ப நலப் பேரமைப்பின் தலைவர் G.S.தனபதி, தியாகிகளுக்கான கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியர் மு. அருணா அவர்களிடம் வழங்கினார்.

கூட்டத்தில் 102 வயதான தியாகி வீரப்பன் என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை போர்த்தி கெளரவித்தர். மேலும் தியாகிகளின் வாரிசுகளின் குறைகளை தனித்தனியாக கேட்டும் மனுக்களாகவும் பெற்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விரைவாக தீர்வு செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தி ஆலோசனை கூறினார். மனுக்களை பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து குறைகளை நிவர்த்தி செய்வதாக தெரிவித்தார்.

கூட்டத்தில் தியாகிகளின் வாரிசுகள் அனைவருக்கும் தனித்தனியே அடையாள அட்டை வழங்க வேண்டும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்,
வீட்டு மனைப்பட்டா, மற்றும் அரசின் இலவச வீடுகள் வழங்க வேண்டும்,
புதுக்கோட்டை நகரில் சங்கத்திற்கு என்று தனியாக ஒரு கட்டடம் கட்ட இடம் வழங்க வேண்டும் என்றும், மத்திய அரசு மற்றும் மாநில அரசு செய்ய வேண்டிய கோரிக்கைகளை பெற்றுக்கொண்டு, அரசுக்கு அனுப்பிவைப்பதாக உறுதியளித்தார்.

அனைவருக்கும் 2026ம் ஆண்டுக்கான மாதாந்திர காலண்டர்கள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ. ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது திருமால், பிரிவு அலுவலர் சேட்டு மற்றும் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சங்கத்தின் பொருளாளர் R. முத்துக்குமார் நன்றி கூறினார்.