• Mon. Feb 23rd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் கல்லூரி மாணவன் உயிரிழப்பு!!

ByK Kaliraj

Feb 23, 2026

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து ஈஞ்சார் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையின் இடது புறமாக உள்ள பெட்ரோல் பங்கிலிருந்து சாலையை நோக்கி வந்த இருசக்கர வாகனம் மீது பேருந்து பலமாக மோதியதில் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனம் இழுத்து செல்லப்பட்டு, கட்டுப்பாட்டை இழந்து பேருந்து முன்னே சென்ற சரக்கு லாரி மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டத்தை சேர்ந்த பரத் 20 என்ற கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தார் மாணவன் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருவதும், இருசக்கர வாகனத்தில் சிவகாசிக்கு வந்தபோது பெட்ரோல் நிரப்பிவிட்டு சாலையை நோக்கி வந்தபோது பேருந்து மோதியது தெரியவந்தது. இதையடுத்து மாணவனின் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் பேருந்து ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பெட்ரோல் பங்கிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவன் மீது அதிவேகமாக வந்த பேருந்து மோதும் பதைப்பதைக்கு சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.