• Fri. Nov 28th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த எம்.எல்.ஏ. கோரிக்கை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று பொள்ளாச்சி எம்.எல்.ஏ., சப்- கலெக்டரிடம் மனு வழங்கினர். அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

பொள்ளாச்சி நகரத்திற்குட்பட்ட 36 வார்டுகளிலும் அவர்களுக்கு சாதகமான நபர்களை புதிய வாக்காளாகளாக சோக்க முயற்சி செய்கின்றனர். மேலும் இந்த தவறுகளுக்கு ஒத்துழைக்காத வட்டார அளவிலான அலுவலர்களை இடமாற்றம் செய்ய முயற்சிப்பதாகவும் தெரிய வருகிறது. ஆகவே உரிய வாக்காளாகளைக் கொண்டு நியாயமான முறையில் தேர்தல் நடத்திட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடன் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார்,அருணாச்சலம், ஜேம்ஸ் ராஜா, வடுகை கனகு உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.