மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி கணேசபுரம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் முழுக்க முழுக்க பட்டியலின மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தெரு விளக்குகள் எரியவில்லை
பெண்களுக்கான கழிப்பறை வசதிகள் இல்லாததால் சாலையை கழிப்பறையாக பயன்படுத்தும் அவல நிலை
கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயை பராமரிக்காததால் கழிவு நீர் தேங்கி தொற்றுநோய் பரவி பெரிய அளவில் சுகாதார கேடு ஏற்ப்படும் அவலம்
மருத்துவ வசதி இல்லாததால் ஏழு கிலோமீட்டர் தூரம் உள்ள சோழவந்தான் வாடிப்பட்டி போன்ற அருகில் உள்ள நகரங்களில் உள்ள மருத்துவமனையை நாடிச்செல்லும் அவல நிலை பேருந்துக்காக மூன்று முதல் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை,

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் பலமுறை மனு அளித்தும் ஐந்து ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் பெண்களுக்கான கழிப்பறை வசதி இல்லாத நிலையில் திருமண மண்டபம் சமுதாய கூடம் உள்ளிட்ட தேவையில்லாத கட்டிடங்களை கட்டி அரசு பணத்தை வீணடிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
தங்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை இனிமேல் தாங்களே ஏற்படுத்திக் கொள்ளப் போவதாக கூறும் இவர்கள்.
பட்டியல் இன சமூக மக்கள் என்பதால் அரசு அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் ஒட்டுமொத்தமாக தங்கள் கிராமத்தை புறக்கணிப்பதாக கூறுகின்றனர் சாலைகளில் திறந்தவெளியை கழிப்பறையாக பெண்கள் பயன்படுத்தும் நிலையில் அடிக்கடி ஆண்கள் வரும்போது எழுந்து நிற்க வேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளதாக கூறுவது வேதனையிலும் வேதனையாக கூறப்படுகிறது.
மேலும் தெருவிளக்கு எறியாததால் ஆறு மணிக்கு மேல் கிராமத்தின் ஒட்டுமொத்த பகுதிகளும் கும்மிருட்டாக இருக்கும் நிலையில் பாம்பு தேள் போன்ற விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் சர்வ சாதாரணமாக வருவதாக கூறுகின்றனர்.
இருட்டான பகுதியாக இருப்பதால் இரவு நேரங்களில் தெருக்களில் செல்லும் வயதானவர்கள் கீழே விழுந்து அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
கழிவுநீர் கால்வாய் முறையாக கட்டாததால் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாக கூறுகின்றனர்.
மருத்துவமனை தங்கள் பகுதியில் இல்லாத நிலையில் மருத்துவ தேவைக்காக அருகில் ஏழு கிலோ மீட்டர் தூரமுள்ள சோழவந்தான் மற்றும் 6 கிலோ மீட்டர் தூரமுள்ள வாடிப்பட்டிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
பல ஆண்டுகளாக பலமுறை அரசின் கதவுகளை தட்டியும் தங்களுக்கு எந்த ஒரு தீர்வும் ஏற்படவில்லை எனக் கூறும் கணேசபுரம் கிராம மக்கள் தேர்தல் அறிவிப்பதற்க்கு முன்பு தங்களுக்கான அடிப்படை வசதிகளை அரசு அதிகாரிகள் அல்லது மக்கள் பிரதிநிதிகள் செய்து தரவில்லை எனில் தங்கள் கிராமத்திற்குள் வாக்குகள் கேட்டு யாரும் வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






