• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மதுரையில் காங்கிரஸ் தொண்டர் ஒட்டிய சுவரொட்டியால் சர்ச்சை..,

ByKalamegam Viswanathan

Feb 20, 2026

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொடர்ச்சியாக அதிகாரத்தில் பங்கு என வலியுறுத்தி வரும் நிலையில், மதுரை மாவட்ட செயலாளர் கோ. தளபதி மற்றும் அமைச்சர் ராஜா கண்ணப்பன் இதற்கு எதிர்வினை ஆற்றிய நிலையில் சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை திருப்பரங்குன்றம் பகுதிகளில் மதுரை காங்கிரஸ் தொண்டர் சக்கரவர்த்தி ஒட்டிய போஸ்டர் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

அதில் வன்மையாக கண்டிக்கிறோம்… “வெள்ளைக்காரனையே விரட்டிய காங்கிரஸ்.! இந்தக் கொள்ளைக்காரனிடம் அடிபணிவோமா.!!” வசனங்கள் அந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளது.