• Sat. Jul 25th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

வாஸன் கண் மருத்துவமனையின் நலம் நாடுவோர் நிகழ்ச்சி..,

ByKalamegam Viswanathan

Feb 19, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாஸன் கண் மருத்துவமனையின் சார்பாக நலம் நாடுவோர் நிகழ்ச்சி நடைபெற்றது. வாடிப்பட்டியின் முகங்களாக அறியப்படும் முக்கியஸ்தர்களை அழைத்து கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி வாடிப்பட்டி கிருஷ்ணா மஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வாஸன் கண் மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி Dr. கமல் பாபு MBBS .,DO., தலைமையேற்று உரையாற்றினார். வாசன் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் DR.பிரேம்குமார் MBBS,DNB.,FAEH.,FAICO Dr., கோபால் அர்ச்சனா MBBS,MS,FAEH ,Dr. சௌந்தர்யா ராகினி MBBS.,MS ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி கிருஷ்ணா மஹால் நிறுவனர் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்வில் பேசிய வாஸன் கண் மருத்துவமனை தலைமை இயக்கு அதிகாரி டாக்டர் கமல் பாபு வாஸன் கண் மருத்துவமனையின் சிறப்பான சேவைகள் பற்றியும் அதிநவீன அறுவை அறுவை சிகிச்சை அரங்குகள் பற்றியும் கண் பாதுகாப்பு பற்றியும் பேசி விழிப்புணர்வு உரையாற்றினார். நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிப்பட்டியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை வாஸன் கண் மருத்துவமனையின் தலைமை நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.