மதுரை வில்லாபுரம் தனியார் மண்டபத்தில் ஓபிசி மக்கள் உரிமைக் கட்சி அறிமுக விழா கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஓபிசி ரைட்ஸ் மாநில துணைத்தலைவர் நாகரத்தினம் தலைமை வகித்தார் ஒபிசி மாநிலத் துணைச் செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார் நாயுடு சங்க பேரவை செல்ல பாண்டியன் வரவேற்புரை கூறினார்.
கூட்டத்திற்கு ஓபிசி உரிமைகள் கட்சி தலைவர் ரத்தின சபாபதி (Rtd SP) முன்னாள் காவல் கண்காணிப்பாளர் குமரவேலு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் ஓபிசிஉரிமைகள் கள் கட்சி சார்பில் 1,தமிழக அரசு ஓபிசி அனைத்து பிரிவினருக்குமான ஜாதிபாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
2, சமுதாயத்தில் மிகவும் பின்தங்கி உள்ள ஓபிசி அணியின் குறிப்பிட்ட சமூகத்தில் இருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளது அனைத்து பிரிவுகளுக்கும் பொதுவான இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட வேண்டும்.
3, மத்திய மாநில அரசுகளில் ஓ பி சி அணியினருக்கு கூடுதல் இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
OBC உரிமை கட்சி தலைவர் இரத்தினசபாபதி பேட்டி

இது ஓபிசி மக்கள் உரிமை கட்சி ஊடகவியலாளர் சந்திப்பு. தற்போது இங்கே ஓபிசி மக்கள் உரிமை கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் இங்கே குழுமி இருக்கிறோம்.
இது ‘சொசைட்டி ஃபார் தி ரைட்ஸ் ஆஃப் பேக்வேர்ட் கம்யூனிட்டீஸ்’ (Society for the Rights of Backward Communities) என்ற அமைப்பு கடந்த ஐந்து வருடங்களாக மத்திய, மாநில அரசுகளை ஓபிசி மக்களின் பல்வேறு தீராத வேதனைகளை அவர்களிடம் எடுத்துச் சென்று நாங்கள் கொடுத்த மனுக்கள் மீதும், எம்எல்ஏ, எம்பி ஆகியோரை சந்தித்து நாங்கள் நேரில் விளக்கியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாக, மனுக்களை தூக்கிக்கொண்டு செல்வது, அதை உதாசீனப்படுத்துவது என்பதையே அனைத்து அரசியல் கட்சிகளும் வழக்கமாக வைத்துக் கொண்டிருந்ததன் காரணமாக, எந்த ஒரு காரணி அல்லது ஃபேக்டர் (factor) அரசியல் கட்சிகளை சற்றே விழித்தெழச் செய்யும் என்பதை ஆராய்ந்து, இதை ஒரு அரசியல் அமைப்பாக அதே பெயரில், ‘ஓபிசி மக்களது உரிமை கட்சி’ எனத் தொடங்கியுள்ளோம்.
தமிழகத்தில் 76 சதவீதமும், அகில இந்தியாவில் 54 சதவீதமும் உள்ள ஓபிசி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை பொது அரங்கிலும், வரப்போகும் தேர்தலிலும் எதிரொலிக்கச் செய்யும் விதமாக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. வரக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்த அமைப்பின் சார்பாக எங்களது இயக்கத்தின் கொள்கைகளை, எங்களது மக்களின் வேதனைகளை பொதுவெளியில் பிரச்சாரம் செய்து அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் அவர்களின் தேர்தல் வாய்ப்புகள் பறிபோகும் வண்ணம் எங்களது அமைப்பைச் சேர்ந்த அனைத்து சமூகமும் ஒரே குரலாக ஒன்று சேர்ந்து போட்டியிட முடிவு செய்திருக்கிறோம்.
வர்ற தேர்தல்ல வந்து நம்ம கோரிக்கை வைக்கிறோம்னு சொல்றீங்க, எந்த மாதிரி கோரிக்கை வைக்கிறீங்க
கோரிக்கை ஏற்கனவே 27 தடவை சொல்லியாச்சுங்க. கோரிக்கை என்ன அப்படின்னா, எங்க பசங்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதில்லை, கல்வியில் முன்னுரிமை அட்மிஷன்ல (admission) கிடைப்பதில்லை. இந்த அரசியல்வாதிகள் நடத்தும் பல்வேறு கல்லூரிகளில் அரசியல் அமைப்புச் சட்டமும், சட்டமும் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்று இருந்தும் அது புறந்தள்ளப்படுகிறது மற்ற இடஒதுக்கீடு உள்ள சமூகங்களுக்கு உதாரணமாக, அவர்கள் வேலை – ஒரு என்டர்பிரனர் (entrepreneur), ஒரு தொழில் செய்வது என்றால் ஒன்றரைக் கோடி கடன், 52.5 லட்சம் மானியம். ஃபாரின் பாருக்கும் (Foreign bar) 35 லட்சம் கொடுக்கிறாங்க. ஏன் அதே மாதிரி இந்த அமைப்பிலும் பின்தங்கியவர்கள், படிக்க வாய்ப்பில்லாதவர்கள், பல தலைமுறைகளாக வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைப் பற்றி அடியோடு அக்கறை இல்லாததன் காரணமாக, எங்களது மக்களுக்கும் பிற ஓட்டு வங்கி இருக்கு அப்படிங்கறதுக்காக ஒரு குறிப்பிட்ட ஒரு பிரிவுக்கு கொடுக்கறீங்க. அதை ஓபிசி மக்களும், ஏன்னா அரசியல் அமைப்புச் சட்டத்தின் பால் நீங்கதான் இவங்க எல்லாம் கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கியிருக்காங்கன்னு எங்களை ஓபிசியா வச்சிருக்கீங்க. அப்போ அது கொடுக்க வேண்டியது உங்க கடமை, நீங்க கொடுங்கன்னு கேட்கிறோம்
இந்த தேர்தல்ல பங்களிப்பு இருக்குமா ஓபிசி அணிக்கு

ஓபிசி அணி தேர்தலில் நிற்கிறோம். பல இடங்களில் நிற்போம். தோற்பவர்கள் ஜெயிப்பார்கள், ஜெயிப்பவர்கள் தோற்பார்கள். மானம் மரியாதையுடன் இருக்கும் அத்தனை ஓபிசி மக்களுமே எங்களுக்கு வாக்களிப்பார்கள், அரசியல்வாதிகளைப் புறக்கணிப்பார்கள்.
இப்ப மும்முனை போட்டி இருக்கும்போது இது நான்காவது முனை போட்டியாக வருமா
நான்காவது முனை போட்டியா தாராளமா எடுத்துக்கலாம். ஓபிசி மக்கள் ஒன்று சேரும்போது நான்காவது அணி போட்டியாகஅமைந்து பல இடங்களில் போட்டியிடுவோம் என இரத்தினசபாபதி கூறினார்.






