• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவக்கம்

ByS.Ariyanayagam

Feb 18, 2026

திண்டுக்கல்லில் கிறிஸ்தவர்கள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் தொடங்கப்பட்டது.

திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. நாற்பது நாள் நீடிக்கின்ற தவக் காலத்தின் முதல் நாள் இதுவே திருநீற்றுப் புதனிலிருந்து 46-ம் நாளாக உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும்.
ஈஸ்டர் பண்டிகைக்கு முன், இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் 40 நாட்கள் நோன்பு மற்றும் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று தொடங்கியது.
திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் சாம்பல் புதன் வழிபாடுகள், சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தவக்காலத்தின் தொடக்க நிகழ்வில் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.