• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடக்கம்

உலகம் முழுவதும் கத்தோலிக்க திருச்சபையின் தவக் காலம் சாம்பல் திருவிழாவுடன்
40_நாட்களுக்கு தொடரும். கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க பேராலயமான நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் தவக்கால தொடக்க திருப்பலி வழிபாடு இன்று காலை நடைபெற்றது. இதில் கோட்டாறு மறைமாவட்ட பேராயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு நெற்றியில் சாம்பல் பூசி தவ காலத்தை தொடங்கினார்கள்.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் வருகை தந்தனர்.

இன்று தொடங்கும் தவக் காலம் 40_ நாட்களுக்கு தொடர்ந்து கத்தோலிக்க கிறித்தவ சமயத்தினரால் பின்பற்றப்படும்.