சென்னை மருத்துவக்கல்லூரி தாம்பரம் கீழ் செயல்படும் ரூ.30.16 கோடி மதிப்பிலான அரசு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் நல் ஆதரவு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்..,
சென்னை மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ், தாம்பரத்தில் ஒரு புதிய மருத்துவமனை தொடங்கப்பட்டிருக்கிறது. தாம்பரத்தில் மக்களுக்காக மட்டுமே இந்த மிகப்பெரிய மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை என்பது ஏற்கனவே கொரோன பேரிடர் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் இருந்து வருபவர்கள் தனிமை படுத்தும் வகையில் isolation வார்டு வேண்டும். இந்த மருத்துவமனை கட்டப்பட்டது.180 படுக்கைகள் உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் 300 முதல் 400 நோயாளிகள் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இங்கு புறநோயாளிகள் பிரிவு படுக்கை வசதியுடன் கூடிய அதிதீவிர நவீன சிகிச்சை பிரிவு 16 படுக்கைகள் பொது படுக்கை பிரிவுகள் 134 அது மட்டுமல்லாது கட்டணம் செலுத்தி பயன் பெற கூடிய வகையில் pay வார்டு 30 படுக்கைகள் என்று மொத்தமாக 180 பேர் சிகிச்சை பெரும் வகையில் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறுதி நிலையில் உள்ள நபர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான மனநிலை ஏற்படுவதற்கு தான் தமிழ்நாடு அரசின் சார்பில் புற்று நோய் நல்லாதாரவு மையம் என்று இவை திறக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் இது போன்ற கட்டமைப்பு வசதிகள் உள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் ஒன்றிய அரசு நிர்வாகம் செய்யக்கூடிய இடங்களிலும் கூட இப்படி ஒரு மருத்துவமனை இல்லை.
புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இறுதி நிலையில் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சி மனநிலை போன்றவை உருவாக்குவதற்கு கவுன்சிலிங் போன்ற பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் அரசு மருத்துவர்களோடு சேர்ந்து சித்த மருத்துவகர்கலும் இந்த பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறி உள்ளார்கள்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைக்கு ஏற்ப வலி நிவாரணம் அறிகுறி மேலாண்மை உளவியல் சமூக ஆதரவை இந்த அரசு கருத்தில் கொண்டு திறந்து வைக்க பட்டுள்ளது.
30 கோடியே 16 லட்சம் மதிப்பில் இந்த மருத்துவமனை இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.






